Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல்.

நாம் தாய் வயிற்றில் பிறந்த போது ,நம்முடன இந்த கோவணமும், தோளில் தொங்கும் நூலும், குடுமியும் கூடவே பிறந்ததோ? என கேள்வி கேட்கிறார். அவையெல்லாம் மற்றவர்களை ஏமாற்றும் வேடங்கள். பிறந்த நாளில் கூட சடங்குகள் என மந்திரம், வேதம் என உளறுவதும் , சிவன் அருளிய உண்மையான வேதியலை மறக்கடித்ததும் , ஆனால் அது எப்பொழுது தேவையோ , உண்மையான வேதியல் மனதில் உதித்து வெளியில் வந்து விடும். Orion Constellation – ல் கண்ணுக்குத் தெரியும் சிவம் எனும் நம் பால் வெளியின் மையம். அதற்கும், நம் சூரியன் எனும் பிரம்மாவால் நாம் படைக்கப் பெற்றோம் அதற்கும் , நிலத்தை அளந்த வீட்டினனை நிலத்தைப் பிளந்து அங்கே அடியை தேட வைத்து போட்டி போட வைத்து கதை விடுவதை வழக்கமாக கொண்ட வல்லவர்கள் குடுமி வைத்த, நூல் தரித்தவர்கள்

Related Posts