Sidhariyal

வட செலவு தொடக்கம் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மார்கழி ஒன்று அன்றே பொங்கல் என சொல்லலாமா? இதுபோல மார்ச் 22 ஆம் தேதி சமநாள் மீனராசி இதன் மாதப்பெயர் பங்குனி என்று தானே இருக்கவேண்டும். பன்னிரெண்டு ராசியின் அதனதன் நட்சத்திரங்கள், மாதப்பெயர் மாறுவது இல்லை இல்லை. மேசம் சித்திரை ஒன்று ஏப்ரல் 22 இல் தொடங்கும். இந்த கணக்கு உண்மையா அல்லது மாற்றமா என்ற எனது ஐயத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். தேதிகளை நாம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பருவங்கள் எப்பொழுதும் சம நாள் சங்கராந்திகளை ஒட்டித்தான் இருக்கும்..கனியர்கள் எப்பொழுதும் இரண்டு விதமான கணக்குகள் வைத்திருப்பார்கள். ஒன்று விவசாயம் பட்டம் பருவம். இது சமநாளை ஒட்டி வரும். மற்றொன்று சூரிய நகர்வின் அடிப்படையில். சூரியன் இருப்பிடம் தெரிந்து கொள்ள. அதுதான் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு திகிரி (ஒரு நாள் ) நகரும். இந்த கணக்கு சாதகத்துக்கு பயன் படுத்துவார்கள். இப்படி தேதியை மட்டும் சூரிய நகர்வை பதிவு செய்ய நகர்த்திக் கொண்டே வந்தால், 30 தேதிகள் மாறினால் , பருவம் மாறிவிடும் என்பதால் மீண்டும் தேதிகளை ஒரு மாதம் முன்னோக்கி நகர்த்தி சமநாளில் இருந்து சித்திரை – 1 ஆரம்பிப்போம். இல்லாவிட்டால் சம நாளில் இருந்து ஒரு மாதம் நகர்ந்ததால் பருவம் தப்பிவிடும்.. அதை சரிசெய்ய சாதக கட்டத்தை மீனராசியில் ஆரம்பித்து மீண்டும் சம நாளில் இருந்து சித்திரை – 1 ஆரம்பித்த்ல் பருவமும், சாதக கணக்குகளும் சரி செய்யப் படும்.

Related Posts