Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ?

உவமையில்லா பேரொளி என்றால், விறைப்பையில் விதையாக இருக்கும் அந்த உவமையில்லா போரொளி உயிர்பெற்று உருவமானது எவ்விடம் என்று கேட்கிறார். அண்டம் என்றால் கருமுட்டை .உவமையில்லாத போராளி உவமையாக உடலாக சாதரணமாக கருமுட்டையில் உருவி நின்றது எவ்விடம் என்று கேட்கிறார். அந்தப் பேரொளிதான் ஆணாகவும் பெண்ணாகவும் படைக்கப் படுகிறது. அந்த தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம் என்கிறார். சுக்கிலம், சுரோனிதத்தைத் தான் தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்றது எவ்விடம் என கருப்பையைக் குறித்து தான் கேட்கிறார். அதைத்தான் திருவரங்கம் என்பர். இப்படி அந்த ஒளியான பரம்பொருள்தான் ஆனாகவும் பெண்ணாகவும் படைக்கப்படுகிறது.

Related Posts