Sidhariyal

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, அந்த ஊருக்கு மணப்பெண்ணாக முதல் முறையாக ஊருக்கு வந்த பெண்ணை ஊருக்கு வந்ததை வரவேற்று மரியாதை செய்து, அவர்களின் குடும்பத்தினர், புது துணி கொடுத்து, மோதிரம், எது முடியுமோ அதை கொடுத்து மரியாதை செய்வர். பின்னர், மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளை வைத்து, அடுத்த கட்ட விவசாய வேலைகளுக்கு உண்டான திட்டங்களை வரையறை செய்வர். இது தான் ஆடி – 18 -ன் பாரம்பரியம்.

Related Posts