Sidhariyal

தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

Sidhariyal

.

AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? ஒரு அரைகுறை புரிதலை முட்டு கொடுக்க எவ்வளவு அரைகுறை தகவல்கள் தருகின்றீர்கள் என ஆச்சரியமாக உள்ளது! uploads/2024/08/photo_2022-06-29_10-21-35.jpg தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology சூரியன் நகருகின்றது என ஒத்துக் கொள்கிறீர்களா? AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன்! தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology அப்படி என்றால் , முதல் கட்டம் மேசத்தில் இருந்து மீனமாகி விட்டது. என்பதும் சரியா? uploads/2024/08/photo_2022-06-29_10-21-36.jpg AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் இப்படி ஒரு கேள்வி, சோதிடம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமையால் வருவது. ராசி வரிசை எதுவும் மாறவில்லை. எவ்வளவு தூரம் அயனாம்சம் திருத்தம் வேண்டும் என்பதே கேள்வி. சோதிடத்தில் கால புருஷன் என்பது கலைச்சொல். அது ஒரு அடிப்படையான மாதிரி கட்டமைப்பு. அதில் வரிசை மேஷத்தில் இருந்து மீனத்துக்கு எல்லாம் மாறாது. தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology அயனாம்சத்துக்கும் சூரிய சுற்றுக்கும் சம்பந்தம் இல்லையா?. சூரிய சுற்றினால் சூரியன் ராசிகளில் மாறாதா? அடிப்படையே சரியா என்பது தான் கேள்வியே ? தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology அயனாம்சம் இதுவரை எத்தனை திகிரி மாற்றி இருக்கிறார்கள். அது எவ்வளவு திகிரி வரை மாறும். சூரிய.ன் சுற்றுவது உண்மையானால் எதை சுற்றி வருகிறது. எவ்வளவு காலத்தில் சுற்றி வருகிறது.? 72 வருடத்திற்கும் சூரிய சுற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன? uploads/2024/08/photo_2022-06-29_10-21-34.jpg AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ராசிகள் புவி மையப்பார்வையில் அமைகின்றன. சூரிய சுற்றின் போது பிற 27 நட்சத்திர கூட்டங்களும் அதனோடு இணைந்தே பயணிக்கும். தொடர்ச்சியாக சற்று நகரும். அயனாம்சம் பூமி சுழற்சியால் வருவது. இந்திய சோதிடத்தின் மாபெரும் வானியல் புரிதல். சூரிய நகர்வால் அது கணக்கிடப்படக்கூடாது. AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் பூமியின் அச்சு சாய்வுக்கோணம் வெகுவாக குறைந்தால் தான் 60 வருடத்தில் அயனாம்சத்தில் ஒரு பாகை நகர்வு சாத்தியம். அதுபோல நிகழ பல ஆயிரம் வருடம் பூமிக்கு ஆகும். இந்திய சோதிடத்தில் ராசிகள் நிலையானவை. மேற்கத்திய முறைகளில் 72 வருடத்துக்கு ஒரு பாகை என்ற அளவில் ராசிகள் நகரும். தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology இந்தியாவில் மட்டும் சூரியன் மேசராசியில் ஏப்ரல் – 14 -ல் தான் நுழைகிறதா?. பின் ஏன் இந்தியாவிலும் ஏப்ரல் – 14 -ல் சூரியன் மேச ராசியில் நுழையாமல் மீனத்திலேயே இருக்கிறது ? இந்திய சோதிடர்கள் சூரியன் வானத்தில் எந்த ராசியில் இருக்கிறது என பார்க்கிறார்களா? இல்லையா?. தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology இந்திய சோதிடர்கள் என்றால் எல்லா மாநிலத்திற்கும் பொருந்துமா? இல்லை தமிழ் நாட்டில் மட்டுமா? AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் தாங்கள் ஸ்டெல்லரியம் மூலம் காட்சிப்படுத்தும் ராசி உருவகங்கள் மேற்கத்திய முறையிலானவை. அது இந்திய சோதிட வான்சித்திரங்கள் அல்ல! தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology நீங்கள் வானத்தை பார்த்து இருக்கிறீர்களா? இந்திய சோதிட வான்சித்திரங்கள் வானத்தில் எப்படி இருக்கும்? AIML Astrology தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஓ! தினமும் நட்சத்திரமும் கிரகங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஸ்டெல்லரியத்தில் settings -> Sky culture -> Indian Vedic என தேர்வு செய்யவும். Constellation Art என்பதை முதல் திரையில் தவிர்க்கவும். தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology அதில் ஒரே மாற்றம் மகரத்திற்கு முதலை படம். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை. இப்பொழுது சூரியன் எந்த ராசியில் உள்ளது.? AIML Astrology தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் இந்திய முறைப்படி தெளிவான வான்சித்திரங்கள் எங்கும் வரையறை செய்யப்படவில்லை. எல்லாம் கற்பனை உருவகங்களே. இணையத்தில் இருக்கும் எந்த ராசி உருவ சித்திரங்களும் இந்திய முறையில் வராது. இப்போது இந்திய சோதிட முறைப்படி சூரியன் மீன ராசியில் உள்ளார். தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology எந்த ராசி உருவ சித்திரங்களும் இந்திய முறையில் வராது என்றால் எப்படி மீன ராசியில் வருகின்றது என்று சொல்கிறீர்கள்? மீன ராசிக்கு என்று வானில் எவ்வளவு விண்மீன்கள், வடிவங்கள், எப்படி இந்திய சோதிடர்கள் வரையறை செய்கிறார்கள்? வானில் எப்படி உறுதிப்படுத்துவது? தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் @AIML Astrology நம் கோவில்களில் ராசிக்கு உண்டான வடிவஙகள் உள்ளது. அதன் வடிவத்தில் வானில் தெளிவாக பார்க்க முடிகிறது. பின் ஏன் வடிவங்கள் இல்ை என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் நானே 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் , ராசிகளின் வடிவங்களைப் பார்த்து இருக்கிறேன். அதை வானிலும் , விண் மீன்களைக் கொண்டு அறிந்து உள்ளேன். கட்டுரைகளை காட்டி ஏப்ரல் – 14 – ல் மேச ராசியில் சூரியன் நுழைகிறது என சொல்ல வேண்டாம். வானில் மீனராசிக்குள் தான் சூரியன் ஏப்ரல் – 14-ல் இருக்கிறது என எல்லோரும் வானில் பார்க்க முடியும் இந்த Comment_ நம் you tube Chl – ல் நடந்தது. கடைசிவரை நம் ஏப்ரல் – 14 -ல் மேச ராசியில் சூரியன் நுழைகிறதா இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே இல்லை. இதிலிருந்து யாருக்கு யார முட்டு கொடுக்கிறார்கள். நாம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல உண்மைகளை நோக்கி செல்வதே நோக்கம்.

Related Posts